உலக இனங்களில் தமிழினம் மட்டும்தான் தனக்குத்தானே தரம் தாழ்ந்ததொரு தரத்தை வழங்கிக் கொள்ளும் இனமாகும் . தமிழினம் தன்னிடம் உள்ள கலைச்செல்வங்களை முழுமையாகப் புரிந்துகொள்ளவும் இல்லை ; உலகிற்கு பரப்பவும் இல்லை . செம்மொழியான தமிழ் கொண்டிருக்கும் அனைத்துக் கலைகளும் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டியது மட்டுமல்ல உலகிற்குப் பரப்பப்பட வேண்டியதும் ஆகும்
செம்மொழியான தமிழ் கொண்டிருக்கும் அனைத்துக் கலைகளும் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டியது மட்டுமல்ல உலகிற்குப் பரப்பப்பட வேண்டியதும் ஆகும் .
தமிழினம் கொண்டிருக்கும் பல்வேறு கலைகளில் இசைக்கலை குறிப்பிடத் தகுந்தது ஆகும் . நமது மரபிசைக்கும் அம்மரபிசையை உருவாக்கிய நாட்டுப்புற இசைக்கும் 2500 – ஆண்டுகளுக்கும் அதிக வயது உண்டு . இந்திய இசையான இந்துஸ்தானிக்கும் தென்இந்திய இசையான கர்நாடக இசைக்கும் தாய் தமிழசையாகும் . ஆனால் உலக அரங்கில் இந்துஸ்தானியும் , கர்நாடக இசையும் பெற்றிருக்கும் வெகுசன அறிமுகத்தை தமிழிசை பெறவில்லை . காரணம், நாம் நமது மரபிசையை மறந்ததும் , முழுமையான தரம்தந்து பரப்பாததும் ஆகும் . நம்மிடம் வெகுசனமக்கள் ரசிக்கும் இசைக்கூறுகள் இல்லையா ? இசைக்கருவிகள் இல்லையா ? பாடல்கள் இல்லையா ? என்றால் அனைத்தும் உண்டு . ஆனால் , நாம் நமது இசைரசனையை திரைப்படப் பாடல்களாகச் சுருக்கிக் கொண்டோம் . திரைப்படத் துறைக்குள் பயணிக்கும் இசை அறிஞர்கள் திரைப்படம் தாண்டியதொரு இசையைக் குறித்து சிந்திக்கவும் இல்லை, செயல்படவும் இல்லை. இதனால், உலகம் ஒரு பெரும் கலைவடிவை இன்னும் முழுமையாக அறிந்து கொள்ளாமலே இயங்கி வருகிறது. ஏன் தமிழனமே நமது இசை வடிவை முழுமையாக உணர்ந்து கொள்ள வில்லை . நமது இசையைப் புரிந்து கொள்ள, உணர்ந்து உலகிற்குச் சொல்ல ஒருசில இணைப்புகளை இங்கே தருகிறேன். இதன் தரத்தை மதிப்பிடுங்கள். நமது இசையும் இசைக் கருவிக்களும் தரமானது என்றால் உலகிற்குச் சொல்லுங்கள் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக