தமிழ்மொழி பல்லாயிரம் ஆண்டுகள் பழமையானது இது பழமையோடு ; பல்லாயிரக்கணக்கான போற்றிப் பாதுகாக்கத்தக்க சிறப்பு மரபுகளையும் உள்ளடக்கியது . ஆனால் , இதன் சிறப்புகளை தமிழர்களே முழுமையாக உணர்ந்து கொள்ளவில்லை நல்வாய்ப்பு இன்மையால் உலகத்தமிழ் மாணவர்கள் தமிழறிவில் வறியவர்களாக மாறி வருகிறார்கள் . ஆனால் தமிழ் மரபுக் கூறுகள் பெருமளவில் தமிழ் ஆர்வலர்களாலும் ஆராய்ச்சியாளர்களாலும் பதிவு செய்யப்பட்டுவிட்டன . அவைகள் அனைத்தும் பல்கலைக்கழகங்களில் தூங்கிவிட்டன ; இளம் தலைமுறைக்குச் சொல்லப்படாமலேயே உள்ளன
நோபல் பரிசுபெற்ற உயிரியலாளர் கான்ராட் லாரன்சு “இயற்கையைப் பராமரிக்க மனிதருக்குக் கற்றுக் கொடுக்க ஒரேவழி அவர்கள் குழந்தைகளாக இருக்கும்போதே அதைச் சொல்லித் தருவதுதான்” என இயற்கையைப் பராமரிக்க வழிமுறை கூறுகிறார். இக்கூற்றை நான் தமிழ் மொழிக்கும் பொருத்திப் பார்கிறேன் . தமிழின் பெருமைகளை பள்ளிக் குழந்தைகளிடம் கூறினால் , அவர்களுக்குக் கற்பித்தால் எதிர்காலத்தில் தமிழ் மொழி வளம்பெறும் என்ற நோக்கில்
ஆங்கிலவழிப் பள்ளிகளில் தமிழசிரியர்களாக பணிபுரிந்துவரும் இணையர்களான நாங்கள் இத்தளத்தை உருவாக்கி உள்ளோம் இத்தளம் உலகத் தமிழ்மாணவர்களுக்கு தன்னால் இயன்ற அளவில் தமிழறிவையும் தமிழார்வத்தையும் ஊட்ட முயற்சிக்கிறது . எதிர் காலத்தில் ஒரு இணையத் தமிழ்ப் பள்ளியையும், தமிழ் மரபுகளைப் பாதுகாக்கும் ஒரு அருங்காட்சியகத்தையும் உருவாக்க ஆர்வம் கொண்டுள்ளோம் . எனவே உலகத் தமிழர்களின் ஆதரவுடன் உதவியையும் கோருகிறோம் . தமிழ் அறிஞர்கள் தங்களது பதிவுகளை நாங்கள் இத்தளத்தில் வெளியிட அனுமதி யையும் ஆதரவையும் தந்து உதவுமாறு வேண்டுகிறோம் . எதிர்காலத்தில் தமிழார்வம் கொண்டதொரு தலைமுறையை உருவாக்குவோம்
தமிழ் வாழ்க !
தமிழைப் போற்றும்,
தேசிகன் .
வல்சா .
உங்கள் முயற்சி வெற்றி பெற நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குvanakam sir,
பதிலளிநீக்குI am Amarnath(ONCE A AMARAVIAN) I AM VERY ASTONISHED TO GET YOUR VALUABLE INFORMATIONS WITHOUT BEING IN SCHOOL.I EXPECT MORE ARTICLES LIKE THESE AND I WANT THIS WEBSITE TO REACH EVERYONE.I ALSO WANT TO SEE THIS WEBSITE GETTING A DOMAIN NAME LIKE.NET,.ORG,.COM,.EDU ETC....
(NOTE:I AM A NINTH STANDARD IN 2011-2012)
thanks ayya i can even tell mypoint of view and i also said about this site to my friends, i said many things about your teachings to my brother
பதிலளிநீக்கு