மலேசிய ரப்பர் தோட்டத் தொழிலாளர்களின் நலனுக்காக செயல் பட்டுவந்த சட்ட அலுவலகத்தில் குமாஸ்தாவாக பணியாற்றி வந்த செல்லப்பனின் இனிய மகன் ராமநாதன். ராமநாதனின் தந்தை பணியாற்றிய அலுவலகம் அரசால் பூட்டப்பட்டது ; குடும்பம் வறுமையில் வாடியது .இதனால் செல்லப்பன் மரணமடைந்தார், ராமநாதன் தனது எட்டு வயதில் தாய்மாமன் ஆதரவில் வளர்ந்தார்.ஆங்கிலோ –சைனீஸ் துவக்கப் பள்ளியிலும் பின்னர் ஆங்கிலோ – சைனீஸ் நடுநிலைப் பள்ளியிலும் பின்னர் ரங்கூன் ரோடு மாலைநேரப் பள்ளியிலும் பின்னர் விக்டோரிய பள்ளியிலும் கல்வி கற்றார் . தனது 16 வயதில் கட்டுமான நிறுவனத்தில் பணிபுரிந்தார் . பின்னர் மற்றொரு நிறுவனத்தில் குமாஸ்தாவாக பணிபுரிந்தார். பின்னர் குடும்பம் சிங்கப்பூருக்கு குடிபெயர்ந்தது ராமநாதனின் பெயரோடு தனது தந்தையாரின் பெயரும் இணைந்து கொண்டதால் செல்லப்பன் ராமநாதன் என்ற மிகநீண்ட பெயரைப் பெற்றார். .
பெயரைச் சுருக்கிக் கொள்ள வேண்டிய கட்டாயம் அதனால் ராமநாதன் நாதன் ஆனார். என்ன காரணம்?நாதனுக்கு சிறு வயது நண்பர்கள் அதிகம். அவர்களில் அதிகமானவர்கள் சீனர்கள் மற்றும் மலாய்க்காரர்கள். அவர்கள் என் பெயரை உச்சரிக்க சிரமப்பட்டனர். இந்தப் பெயரை சுருக்குவோமா, வெட்டுவோமா என்று குரல் எழுப்பிக் கொண்டிருந்தனர். "ராமா முதலில் வரட்டுமா கடைசியில் வரட்டுமா என்று கேட்டனர். அவர்களின் விருப்பத்துக்கு விட்டு விட்டேன். நாதன் என்று அழைப்பது தான் சுலபமாக இருக்கிறது என நண்பர்கள் முடிவு செய்தனர்; மறுக்க முடியவில்லை. அந்தப் பெயரே ஒட்டிக் கொண்டது என்கிறார் நாதன்.
இனிஷியல் வேண்டுமல்லவா? அதனால் செல்லப்பன் ராமநாதன் என்ற பெயரைச் சுருக்கி எஸ்.ஆர்.நாதன் ஆனேன். என்கிறார், எஸ். ஆர். நாதன் ஜப்பான் சிங்கப்பூரை ஆக்கிரமித்த போது சப்பான் மொழியைக் கற்றுக்கொண்ட நாதன், சப்பான் போலீசாருக்கு மொழிபெயர்ப்பாளர் ஆனார் .

தமது குமாஸ்த பதவியை விட்டுவிட்டு மீண்டும் படிக்கத் துவங்கினார்எஸ். ஆர். நாதன் . மலேசியப் பல்கலைக் கழகத்தில் சமூகவியல் துறையில் சேர்ந்து தலைசிறந்த மாணவனாக வெளியேறினார் . பின்னர் பல்வேறு பதவிகள் இவரைத் தேடிவந்தன குறிப்பாக தொழிலாளர் அமைச்சகத்தின் மருத்துவ சமூகப் பணியாளராக பணிபுரிந்த இவர், 1962 – இல் தொழிலாளர் ஆராய்ச்சிப் பிரிவின் துணை இயக்குனராக கடமையாற்றினார் . பின்னர் புலனாய்வுத் துறை இயக்குநராகவும் திறம்பட பணிபுரிந்தார் .இவரது சீரிய செயல்பாடு பல்வேறு படிநிலைகளில் இவரை உயர்த்தியது . எஸ்.ஆர்.நாதன் மலாயா பல்கலைக்கழகத்தில் சமூகவியல் படித்து 1954ல் பட்டம் பெற்றார். அதற்குப் பிறகு அவர் பார்த்த வேலைகளின் பட்டியல் நீளும். பல நிறுவனங்களில் உயர் பதவிகள். சிங்கப்பூர் இந்து அறக்கட்டளை வாரியம் இந்தியர் மேம்பாட்டுச் சங்கப் பணிகள். மலேசியா அமெரிக்கா ஆகியவற்றுக்கான சிங்கப்பூர் தூதர் பதவிகள் எனப் பலபதவிகள் வகித்தார் .
சிங்கப்பூரின் அதிபராக 12 ஆண்டு காலம் பதவி வகித்தார் (செப் 1999 முதல் 31 ஆகஸ்ட் 2011வரை ). சிங்கப்பூர் வரலாற்றில் 12 ஆண்டுகள் அதிபராகப் பதவி வகித்தவர் இவர் ஒருவரே யாவார் . 2011 - ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31ல் ஓய்வு பெற்ற இவருக்கு வயது 87.இவருடைய துணைவியார் ஊர்மிளா இந்திய வங்காளி வம்சாவளியைச் சேர்ந்தவர். இவர்களுக்கு ஒரு மகள் ஒரு மகன் மூன்று பேரப் பிள்ளைகள்.என் 12 ஆண்டு அதிபர் பதவிக் காலத்தில் மறக்க முடியாத அனுபவம் என்று ஒன்றிரண்டைச் சொல்ல முடியாது. எதையுமே மறக்க முடியாது என்கிறார் எஸ்.ஆர்.நாதன். தனது அனுபவங்களின் தொகுப்பு நூலை விரைவில் வெளியிடவிருக்கிறார்.
வசதி குறைந்தவர்கள் உதவி தேவைப்படுவோருக்கு வழங்குவதற்காக 2000 த்தில் அதிபர் சவால் அறநிதியை ஏற்படுத்தினார்.சிங்கப்பூர் மக்கள் தொகையில் இந்திய சமுகத்தினர் 8 / 9 சதவீதம் உள்ளனர். இந்த இலக்கை அடையவே நீண்ட காலமானது. இந்த எண்ணிக்கை உயர நம் பிள்ளைகள் படிப்பிலும் தொழிலிலும் முன்னேறுவதற்கு பெற்றோர் பாடுபட வேண்டும்என்பது இவர் வேண்டுகோள் . "டிவி பார்க்கும் பழக்கம் இன்றைக்கு அதிகரித்து விட்டது. முன்னேற்றத்துக்கு அது தடையாக இருக்கக் கூடாது. டாக்டராக வேண்டும் இன்ஜினியர் ஆக வேண்டும் என்று எல்லா பிள்ளைகளும் நினைக்கும் போக்கு வேண்டியதில்லை. பல துறைகளிலும் முன்னேறும் இலக்குடன் அவர்கள் படிக்க வேண்டும் என்கிறார் எஸ்.ஆர்.நாதன்.
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 1943 ஜூலை மாதம் சிங்கப்பூர் பாடாங் திடலில் ஆற்றிய உரையை கேட்டு எழுச்சி பெற்றது மறக்க முடியாத அனுபவம் என்றார் அவர். நேதாஜியின் கொள்ளுப் பேரன் சுகாதா போஸ் எழுதிய நூலை கடந்த ஜூலை மாதம் சிங்கப்பூரில் வெளியிட்டுப் பேசினார்.சிங்கப்பூரின் ஆறாவது குடியரசுத் தலைவராகப் பதவி வகித்த எஸ்.ஆர்.நாதன் ஆகஸ்ட் 1999ல் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆறு ஆண்டு பதவிக் காலம் முடிவடைந்ததால் 2005 ஆகஸ்டில் மீண்டும் பதவிக்கு வந்தார்.தைவானைச் சேர்ந்த சிற்பி ஒருவர் அதிபர் எஸ்.ஆர்.நாதனின் வெண்கலச் சிலையை வடிவமைத்து வழங்கினார். அவருடைய முக உருவம் கொண்ட சிலையை வடிப்பதற்கு ஓராண்டு காலம் பிடித்ததாகசிற்பி செர்ன் லியன் ஷான் கூறினார் எஸ்.ஆர்.நாதன் ஒரு பழைய கடிகாரத்தையே எப்போதும் கையில் கட்டிக் கொண்டிருக்கிறார். "முப்பது வருஷத்துக்கு முன் 1980ல் என் மாமனார் தந்த அன்பளிப்பு இது. இன்று வரை இந்தக் கடிகாரத்தைப் பாதுகாப்பாக பயன்படுத்தி வருகிறேன் என்கிறார்.
எஸ். ஆர். நாதன் தமிழ் மொழி மீது அதிக பற்றும் மரியாதையும் கொண்டவர். மிக உயர்பதவி வகித்த பிறகும் தனது பாரம்பரியத்தையும் தனது மூதாதையரின் தாய் மண்ணையும் மறக்காதவர். சிங்கப்பூரில் தமிழ் கலை மற்றும் கலாச்சாரம் பரவ பல்வேறு வகையில் பாடுபட்டவர். .பல்வேறு கருத்தரங்கங்களில் பங்குகொண்டு ஆக்கப்பூர்வமான பணிகளைச் செய்தவர் பல தமிழ் மேதைகளைக் கவுரவித்ததோடு ஒரு உண்மையான தமிழ் ஆதரவாளராக இருந்தும் வருகிறார் . கண்ணதாசன் கவிதைகள் இவருக்கு மிகவும் பிடித்தமானது. ஓய்வு நேரத்தில் கண்ணதாசன் பாடல்களைக் கேட்பது வழக்கம்.அதிபர் பதவிக்காலம் நிறைவு பெற்றாலும் எப்போதும் போலவே இருக்கிறேன். ஓய்வாக இருக்கக் கூடாது; ஏதாவது செய்து கொண்டே இருக்க வேண்டும். பல்கலைக்கழகங்கள் ஆய்வுக் கழகங்கள் சமூக அமைப்புகளில் தொடர்பு இருப்பதால் வீட்டிலேயே ஓய்ந்திருக்காமல் அங்கெல்லாம் சென்று வருகிறேன் என்கிறார் எஸ்.ஆர்.நாதன்
திரு . எஸ்.ஆர்.நாதன் வகித்த பல்வேறு பதவிகள்
1940 - 1941: ஆபீஸ் பையன் மற்றும் பல்வேறு கூலி வேலைகள்.
1955 - 1956: மருத்துவமனை மற்றும் தொழுநோய் மையம் - மருத்துவம் சமூக சேவகர் சிங்கப்பூர் சிவில் சேவை.
1956 - 1962: விடுதலை பெற்ற அடிமைகளும் தான் நல அதிகாரி தொழிலாளர் அமைச்சகம்.
1962 - 1964: உதவி இயக்குநர் தொழிலாளர் ஆராய்ச்சி பிரிவு.
1964 - 1966: இயக்குநர் தொழிலாளர் ஆராய்ச்சி பிரிவு.
1966 - 1970: உதவி செயலாளர் பின்னர் துணை செயலாளர் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு.
1971: உள்நாட்டலுவல்கள் அமைச்சு குடிமகன் செயலாளர் நடிப்பு.
1971 - 1979: இயக்குனர் பாதுகாப்பு மற்றும் புலனாய்வு பிரிவு (குடிமகன்

செயலாளர் பதவி) பாதுகாப்பு அமைச்சு.
1973 - 1986: தலைவர் மிட்சுபிஷி சிங்கப்பூர் கனரக தொழில் (லிமிட்டெட்) லிமிடெட்
1979 - 1982: முதல் குடிமகன் செயலாளர் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு.
1980 - 1988: இயக்குநர் சிங்கப்பூர் தேசிய எண்ணெய் நிறுவனம்.
பிப்ரவரி 1982 - 1988: நிர்வாக தலைவர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பிரஸ் (1975) லிமிடெட்
ஏப்ரல் 1988 - 1990: மலேஷியா உயர் ஆணையர்.
ஜூலை 1990 - ஜூன் 1996: அமெரிக்க தூதுவர்.

15 ஜூலை 1996 - 17 ஆகஸ்ட் 1999: தொழில்நுட்ப பல்கலைக்கழகம் இயக்குனர் பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஆய்வுகளுக்கான நிறுவனம். நிறுவனம் இப்போது சர்வதேச ஆய்வுகளுக்கான எஸ் பள்ளி உள்ளது.
18 ஜூலை 1996: சார்பு அதிபர் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம்.
1 செப் 1999 - 31 ஆகஸ்ட் 2011: சிங்கப்பூர் இரண்டாவதுமுறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் .
விருதுகள்
1964: பின்டாங்க் (பொது சேவை நட்சத்திரம்).
1967: பொது நிர்வாகம் பதக்கம் (வெள்ளி).
1974: மெச்சத்தக்க சேவை விருது.
2007: சிறந்த மாணவர்கள் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம்.
2010: பஹ்ரைன் இருந்து அல் காலிபா ஆணை (முதல் நிலை).
2010: Distinguished சர்வீஸ் விருது தங்கம் சிங்கப்பூர் சாரணர் சங்கம்.
2011: NTUC 50 சிறப்பு அங்கீகாரம் விருதுகள்.
2011: சிவில் சட்டம் மதிப்புறு பணி காரணம் மொரிஷியஸ் பல்கலைக்கழகத்தின் டாக்டர் பட்டம்.
நன்றி : infopidia , dinamalar , window2india 18 ஜூலை 1996: சார்பு அதிபர் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம்.
1 செப் 1999 - 31 ஆகஸ்ட் 2011: சிங்கப்பூர் இரண்டாவதுமுறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் .
விருதுகள்
1964: பின்டாங்க் (பொது சேவை நட்சத்திரம்).
1967: பொது நிர்வாகம் பதக்கம் (வெள்ளி).
1974: மெச்சத்தக்க சேவை விருது.
2007: சிறந்த மாணவர்கள் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம்.
2010: பஹ்ரைன் இருந்து அல் காலிபா ஆணை (முதல் நிலை).
2010: Distinguished சர்வீஸ் விருது தங்கம் சிங்கப்பூர் சாரணர் சங்கம்.
2011: NTUC 50 சிறப்பு அங்கீகாரம் விருதுகள்.
2011: சிவில் சட்டம் மதிப்புறு பணி காரணம் மொரிஷியஸ் பல்கலைக்கழகத்தின் டாக்டர் பட்டம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக