திங்கள், 24 அக்டோபர், 2011

தொன்மொழியான தமிழ்மொழி குறித்த குறுஞ்செய்திகள்


          ஆங்கிலத்தில் எண்ணற்ற பிறமொழிச் சொற்கள் கலந்துள்ளன வடமொழியிலும் தமிழ் , பிராகிருதம் , பாலிமொழிச் சொற்கள் கலந்துள்ளன இதேப்போல் தமிழிலும் பிறமொழிச் சொற்கள் கலந்துள்ளன . பிறமொழிச் சொற்களை நீக்கிவிட்டால் உலகின் பலமொழிகள் இயங்காது ஆனால் பிறமொழிச் சொற்களை நீக்கிவிட்டாலும் தமிழ்மொழி இயங்கும் . மிகுதியான வேர்ச் சொற்களைக் கொண்டது  தமிழ்மொழியாகும் அதனால் புதிய கலைச் சொற்களை தமிழ் மொழியில் உருவாக்கிக் கொள்ள முடியும்                கன்னடம் , தெலுங்கு , மலையாளம் , துளு போன்ற திராவிட மொழிகளுக்கு மட்டுமல்லாமல் பிராகுயி போன்ற வடநாட்டு  மொழிகளுக்கும் தமிழ்மொழி தாயாக விளங்குகிறது . ஆயிரத்து எண்நூறு மொழிகளுக்கு வேர்ச்சொறகளையும்  நூற்று எண்பது மொழிகளுக்கு உறவுப் பெயர் களையும் தந்து உலக மொழிகுளுக்கு எல்லாம் தாயாகத் திகள்கிறது 
                                                           
        உலக இலக்கியங்களில் முதன்மைபெற்ற சங்க இலக்கியங்களின் மொத்த வரிகள்  26,350 . இந்த அளவிற்கு விரிவாக உருவாக்கப்பட்ட இலக்கியங்கள் , உலகில் வேறெந்த மொழியிலும் இல்லை என்பது உலக இலக்கியங்களை ஆராய்ந்த செக் நாட்டு மொழியியல் அறிஞர் கமில்சுவலபிலின் கருத்தாகும் .                                             தமிழ் மிகவும் பண்பட்ட மொழி என்று மக்சுமுல்லர் குறிப்பிடுகிறார் . அது தனக்கே உரிய இலக்கியச் செல்வங்களைப் பெற்றிருக்கும் மொழி என்றும் பாராட்டியிருக்கிறார் . நமக்குக் கிடைத்த இலக்கண நூல்களுள் மிகப் பழமையானது தொல்கப்பியமாகும் . இஃது எழுத்து , சொல் , பொருள் ஆகிய மூன்றனுக்கும் இலக்கணம் கூறுகிறது . தொல்காப்பியரின் ஆசிரியரான அகத்தியர் எழுத்து , சொல் , பொருள் யாப்பு , அணி ஆகிய ஐந்து இலக் கணங்களை அகத்தியம் என்ற பெயரில் எழுதியுள்ளார் . அறிவியல் முறையில் அமைந்த இத்தகைய இலக்கண நூல்கள் தோன்றியதிலிருந்து ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்மொழி செம்மைநிலை அடைந்திருக்க வேண்டும் என்பது அறிஞர்களின் கருத்தாகும் .
                சங்க இலக்கியங்கள் தமிழரின் பட்டறிவின் வெளிப்பாடுகள் ; அறத்தை வலியுறுத்துவன “ பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்”  , “யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் “ முதலிய பண்பாட்டு நெறிகளை உலகுக்குக் கூறுகின்றன .” யாதும் ஊரே யாவரும் கேளிர் “  என உலக மக்களை உறவுகளாக்கியது புறநானூறு . “ பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்று மக்கள் அனைவரையும் சமநிலையில் பார்க்கிறது திருக்குறள் . இவற்றோடு தமிழானது எக்காலத்திற்கும் பொருந்தும் மொழியில் கோட்பாடுகளை பெற்றிருப்பதோடு காலப்புதுமைக்கும் கணினிப் பயன்பாட்டுக்கும் ஏற்றதாகும்      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக